ஜெயிலர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய திரை உலகில் முக்கிய நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அனிருத் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது தொடர்ந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விநாயகன் டப்பிங் பேசும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் லால் சலாம் படப்பிடிப்பை முடித்த பிறகு நடிகர் ரஜினியும் அவருக்கான டப்பிங் பணியை தொடங்குவார் என்ற புதிய தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.