திடீரென தேடுதலில் ட்ரெண்டிங்காகி வருகிறது மாயோன் திரைப்படம் – ஜெயிலர் – மாயோன் விவாதம் என்ன?

டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாயோன்.

தற்போது இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மாயோன் படத்தின் விமர்சனங்களை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி உள்ளது. அதேபோல் மாயோன் படத்தை பார்த்தவர்கள் படத்தை பாராட்டியும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பலரும் இந்த படத்தை ஜெயிலர் படத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் இந்த இரண்டு படங்களுமே சிலை கடத்தலை குறித்து பேசுவது தான். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கழுகை வைத்து கதை ஒன்றை சொன்னதை போல இந்த படத்திலும் கழுகு ஒன்று இடம் பெறுகின்றது. இப்படி இரண்டு படத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதால் இது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால் OTT தளத்திலும் மாயோன் திரைப்படம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.