ரிலீஸில் ஜகமே தந்திரம் படம் படைத்த சாதனை ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

Jagame Thanthiram Movie Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது.

தனுஷ் ரசிகர்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன் உட்பட பலர் சமீபத்தில் பிட்டர் ஸ்பேஸ் வழியாக லைவ்வாக படம் குறித்து கலந்துரையாடினர்.

இதுவே முதல் முறை.. ரிலீஸில் ஜகமே தந்திரம் திரைப்படம் படைத்த சாதனை

இந்த லைவ்வில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். ட்விட்டரில் அதிக படியான ரசிகர்கள் பங்கேற்றது இதுவே முதல் முறை. இதனால் இதனை தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் மீதான இந்த ஆர்வம் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாக கூறி வருகின்றனர்.