இயற்கை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருந்தது ஆனால் என நடிகர் ஷாம் அது குறித்து பேசியுள்ளார்.

Iyarkai 2 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான எஸ் பி ஜனநாதன் சமீபத்தில் தான் உடல்நலக் குறை பாட்டால் உயிரிழந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் இயற்கை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கண்ட ஜனநாதன் தொடர்ந்து அடுத்தடுத்து பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, லாபம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இயற்கை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருந்தது - ஆனால்? நடிகர் ஷாம் வெளியிட்ட ஷாக் தகவல்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான லாபம் திரைப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த படத்தை தொடர்ந்து எஸ்பி ஜனநாதன் அடுத்ததாக இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருந்ததாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.

அதற்காக கதை விவாதம் கூட நடைபெற்றது. படத்தின் கதைகளம் நார்வேயில் நடப்பது போல அமைக்கப்பட்டிருந்தது என ஷாம் தெரிவித்துள்ளார்.