ISL Football Tournament Draw Done!
ISL Football Tournament Draw Done!

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 6வது சீசன் நடக்கிறது. ஜாம்ஷெட்பூரில் நடந்த லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ காஸ்டல் முதல் கோலடித்தார். இதற்கு வடகிழக்கு யுனைடெட் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 90வது நிமிடத்தில் எழுச்சி கண்ட வடகிழக்கு யுனைடெட் அணிக்கு பனாகியோடிஸ் டிரியாடிஸ் ஒரு கோலடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என, ‘டிரா’வில் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here