OTT யில் வெளியாகிறதா இந்தியன் 3? உண்மையை உடைத்த இயக்குனர் சங்கர்..!
இந்தியன் 3 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சங்கர். இவர் இயக்கும் படங்களில் எப்போதும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.
அப்படி இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்று இந்தியன். இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது. மேலும் நேரடியாக OTT யில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சங்கர் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில் இந்தியன் 2 நெகட்டிவான விமர்சனம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தியன் 3 திரைப்படத்தை சிறப்பாக உங்களுக்கு கொடுப்பேன் என்றும், கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்றும் சொல்லியுள்ளார். இதனால் இந்தியன் 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.