இரவின் நிழல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இப்படம் உருவாகியிருந்தது.

இதனால் அதிக ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. அண்மையில் இப்படம் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் நடிகர் பார்த்திபனுக்கு சமூக வலைதள பக்கத்தின் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

YouTube video