India's Awards to Soldiers
India's Awards to Soldiers

India’s Awards to Soldiers : நாட்டின் பாதுகாப்பிற்காக வீர தீர செயல் புரிந்த பாதுகாப்பு படையினர் ‘கீர்த்தி சக்ரா‘, ‘சௌர்யா சக்ரா’ உள்ளிட்ட விடுதிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்தார்

நாட்டின் 64வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நாட்டின் பாதுகாக்கும் நோக்கில் வீரத்தைப் பறைசாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு வீரதீர செயல் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக ஜம்மு காஷ்மீர் காஷ்மீரில் காவல்துறை தலைமை அப்துல் ரஷீக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதாக ‘கீர்த்தி சக்ரா‘ விருது அறிவிக்கப்பட்டது.

இதுவரை தளபதி விஜய் வாங்கியுள்ள மொத்த விருதுகள் என்னென்ன தெரியுமா? – முழு விவரம் இதோ

அவரது துணிவையும் தியாகத்தையும் போற்றும் வகையில் போர் இல்லாத காலகட்டத்தில் வீரதீர செயலுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய விருதான இந்த விருது வழங்கப்பட்டது.

ராணுவ வீரர்கள் கிருஷன் ராவத், அணி அர்ஸ், ஹவில்தார், அலோக் குமார் ஆகியோருக்கு ‘சௌர்யா சக்ரா’ விருது வழங்கப்பட உள்ளது. மேலும் விமானப்படை வீரர் விசாக் நாயரும் ‘சௌர்யா சக்ரா’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

‘சௌர்யா சக்ரா’ விருது பெரும் ராணுவ வீரர்கள் மூவரும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளை வெவ்வேறு தருணங்களில் தடுத்து நிறுத்தி உள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னந்தனியாக வீரத்துடன் செயல்படும் நுண்ணறிவுத் திறனை பயன்படுத்தியும் பயங்கரவாதிகள் பலரை அவர்கள் சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோல வீரதீர செயல் புரிந்த 60 ராணுவத்தினருக்கும் ‘சேனா’ பதக்கமும், 4 கடற்படை வீரர்களுக்கு ‘நவ சேனா’பதக்கமும், ஐந்து விமானப்படை வீரர்களுக்கு ‘வாயு சேனா’ பதக்கமும் வழங்குவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றிய சிபிஐ அதிகாரிகள் 32 பேருக்கு விருதுகளை வழங்கவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.