Indian team making history
Indian team making history

இந்தியா வந்த வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடந்தது.

இதில் ‘பிங்க்’ நிற பந்து பயன்படுத்தப்பட்டது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 106, இந்தியா 347/9 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் உமேஷ் ‘வேகத்தில்’ எபோதத் (0), முஷ்பிகுர் (74) சிக்கினர். தொடர்ந்து அசத்திய இவர், அல் அமினை (21) வெளியேற்றி, ஐந்தாவது விக்கெட் வீழ்த்தினார். ஏற்கனவே, காயம் காரணமாக வெளியேறி இருந்த மகமதுல்லா, மீண்டும் பேட்டிங் செய்ய வரவில்லை. வெறும் 47 நிமிடத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து 4 போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற உலக சாதனை படைத்தது.