Indian 2 Simbu
Indian 2 Simbu

Indian 2 Simbu : இந்தியன் 2 படத்தில் சிம்புவின் ரோல் என்ன என்பது குறித்து தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் இந்தியன்.

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார் ஷங்கர்.

சிம்பு, விக்ரமை தொடர்ந்து மணிரத்தினம் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார் – வெளியான அதிரடி தகவல்.!

இந்த படத்திலும் கமல்ஹாசன் ரெட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.

மேலும் சிம்புவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது அவரது ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் சிம்பு இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு பேரனாக நடிக்க உள்ளாராம். மேலும் ஏற்கனவே சிம்பு படத்தின் என்ன கதாபாத்திரம் தேவையோ அதை மட்டும் கொடுங்கள். எனக்காக கதையில் மாற்றம் செய்ய வேண்டாம் என சிம்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.