இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.

Indian 2 shooting going in chennai important update – ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல தடங்கள்களுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகம் பெற்றுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகவர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். கால்ஷீட் காரணமாக இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மோசம் எனில் ஆட்சியும் அப்படித்தான் – ஜெயக்குமாருக்கு கமல் பதிலடி

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்று வருகிறது. தினமும் 6 மணிக்கு மேல் நடக்கும் படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வருகிற 5 மற்றும் 6ம் தேதி அங்கு முக்கிய காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.