இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்.

இந்திய திரை உலகில் ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது.

இப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைகளை தாண்டி நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தினை லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சேனாதிபதி கெட்டப்பில் நடிகர் கமல்ஹாசன் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டலான கெட்டபின் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

https://twitter.com/kollywoodnow/status/1600450765100761088?t=Ra-HY8zUC2uG0jHE5Z3Puw&s=19