India VS New Zealand Semi-final : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

India VS New Zealand Semi-final :

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது.

ஜூலை 9ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் அரையிறுதியும் ஜூலை 11ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதியும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதியது.

அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும், நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக வில்லியம்சனும் இருந்தனர். அந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றதுடன் கோப்பையையும் வென்றது.

பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.

கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இரண்டு அணிகளும் சிறப்பாக பயிற்சி பெற்று வருகின்றன. நாளை எந்த அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் நுழையும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இது வரை சிற‌ப்பாக செயல்பட்டு வருகிற இந்திய அணி நடக்க இருக்கும் அரை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு செல்லும் என்பதே பலரின் நம்பிக்கை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.