India second team
India second team

India second team – இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சா்ர்பில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். 120 பந்துகளில் 116 ரன்களும், விஜய் சங்கர் 41 பந்துக‌ளி‌ல் 46 ரன்களும் அடித்தனர்.

251 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இறு‌தி ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு அளிக்கப்பட்டது. பேட்டிங் செயும் போது ரன் அவுட் செய்யப்பட்ட இவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.

கொடுக்கப்பட்ட ஓவரில் தனது முதல் பந்து வீச்சீல் விக்கெட் எடுக்க அதனை தொடர்ந்து முன்றாவது பந்திலும் விக்கெட் வீழித்த ஆட்டம் முடிவிற்கு வந்தது.

இந்த கடைசி இரு விக்கெட்களும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரண மாக இருந்தது.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி தனது 500-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி 558 ஒரு நாள் போட்டி வெற்றிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இந்திய அணி இதுவரை 963 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 500 வெற்றியும், 414 தோல்வியும், 9 டையும் கண்டுள்ளது. 40 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

மேலும் கோலி நேற்று நடந்த போட்டியில் சதம் அடித்ததால் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கோலி 325 ரன்கள் அடித்துள்ளார். மற்றும் டோனி 268 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

அது மட்டும் இல்லமால் ஒருநாள் போட்டியில் 40 சதங்களுக்கு மேல் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் உடன் தற்போது கோலி இணைந்துள்ளார்.