இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்குவது குறித்து பிரபல இயக்குனர் அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் இசை ஜாம்பவானாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் இளையராஜா. இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படும் இளையராஜாவின் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

அவரது இசையமைப்பில் உருவான பல சூப்பர் ஹிட் பாடல்கள் தற்போதுள்ள இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்று பிரபல இயக்குனர் அளித்திருக்கும் பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதன்படி, பிரபல முன்னணி இயக்குனர் ஆர்.பால்கி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் அதில் நடிகர் தனுஷை தான் இளையராஜாவாக நடிக்க வைக்க போவதாகவும் அவர் கூறி இருக்கிறார். மேலும் அவர் தனுஷின் முக ஜாடை இளையராஜா போல் தான் இருக்கும் என்றும் தன்னைப் போன்று தனுஷும் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் என்றும் கூறியிருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.