ரகுவரனை திருத்த முயற்சி செய்தேன்.. ஆனால்? பப்லு ஓபன் டாக்.!!
நடிகர் ரகுவரன் குறித்து பப்லு பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டி இருப்பவர் ரகுவரன். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவருடைய இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் நடிகர் பப்லு ரகுவரன் குறித்து சிலை விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சீனியர் அங்கு தான் எங்களுடைய நட்பு தொடங்கியது. நானும் அவரும் பார்க்க ஒரே மாதிரி தான் இருப்போம் என்று கூறியுள்ளார். ரகுவரன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்ததால் மூளையில் இருக்கும் நினைவுப்பகுதி செயலிழந்தது தான் மறைவுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். அவரை திருத்துவதற்கு நான் முயற்சி செய்த போதும் உன்னுடைய வேலை எதுவோ நீ அதை மட்டும் பார் என்று சொல்லி சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
