
இனி நான் எப்போதும் சினிமாவிற்குள் வரமாட்டேன் என ஒஸ்தி நாயகி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் நாயகியாக நடித்து இருந்தவர் ரிச்சா. இவர் தற்போது எந்தவொரு படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் உங்களின் அடுத்த படம் எப்போது என கேட்டுள்ளனர்.
அதற்கு ரிச்சா நடிகைகளுக்கு 90 வயதானாலும் அடுத்த படம் எப்போது என கேட்பது வழக்கமான விஷயம் ஆனால் நான் இனி மீண்டும் சினிமாவிற்குள் வரமாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் சினிமா என்பது குறுகிய கால வீச்சு அதை நான் கடந்துவிட்டேன் மீண்டும் அதற்கு திரும்ப விரும்பவில்லை என பதிலளித்துள்ளார்.