ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலின் சர்ச்சை வரிகள் குறித்து பாடலாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

அதிரடியான சண்டை படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி மிரட்டியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள முதல் பாடலான ‘காவாலா’ என்னும் பாடல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியாகி இணையதளத்தை தற்போது வரை அதிர விட்டு வருகிறது.

இந்நிலையில் முதல் பாடலின் வரவேற்பை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான “Hukum” என்ற பாடலை கடந்த 17ஆம் தேதி படக்குழு வெளியிட்டு இருந்தது. தற்போது அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பாடலில் “பேர தூக்க 4 பேரு, பட்டத்தை பறிக்க 100 பேரு” என இடம்பெற்று இருக்கும் வரிகள் மற்ற ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாக மாறி வருவது குறித்து கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், தான் ரஜினி ரசிகர் எனவும், ரஜினி கெத்து என்று தான் அதில் எழுதியுள்ளதாகவும் கூறி அந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். இவரது இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.