சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ‘மோனிகா’ பாடல்: செம வைரல்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ பட ஷூட் முடிவடைந்துவிட்டது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அனிருத்தின் புதிய பரிணாம இசையில் ‘மோனிகா’ பாடல் துள்ளளும் இதமும் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் எளிமையான வரிகளும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளது. சுப்லாஷினி, அனிருத்தின் குரல்களுடன் அசல் கோலாரின் ராப் கச்சிதமாக செட் ஆகியிருக்கிறது.

குறிப்பாக, ‘மோனிகா பெல்லூசி’ பெயருக்கு நியாயம் சேர்க்கும் விதமாக பாடல் முழுவதும் சிவப்பு உடையில் நடன அசைவுகளால் ரசிகர்களின் மனம் ஈர்க்கிறார் பூஜா ஹெக்டே. அவரது நடன அசைவுகள் வசீகரிக்கிறது. இந்தப் பாடல் வீடியோவின் மெகா ஆச்சரியங்களுள் முதன்மையானதாக இருக்கிறது சவுபின் சாஹிரின் பங்களிப்பு.

மலையாளத்தில் உணர்வுப்பூர்வ நடிப்பால் வசீகரிக்கும் சவுபின் இங்கே முழு எனர்ஜியுடன் அட்டகாசமாக குத்தாட்டம் போட்டு, பூஜா ஹெக்டேவின் பிரசன்ஸை மீறி கவனிக்க வைத்திருக்கிறார். இவ்வாறு பல புதிய முயற்சிகளால் இப்பாடல் வார்க்கப்பட்டு, தற்போது வைரலாகி தெறிக்கிறது.

how is the monica song from the movie coolie
how is the monica song from the movie coolie