Hima Das Created History : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, India Sports News, hima das wins fifth gold medal

Hima Das Created History :

ஹிமா தாஸ் வயது 19, அசாம் மாநிலத்தில் உள்ள திங் என்ற இடத்தில் பிறந்தார். கடந்த ஆண்டு பின்லாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.

தொடர்ந்து அசத்திய இவர், இத்தொடரில் பெண்களுக்கான 4*400 மீ., மற்றும் கலப்பு 4*400 மீ., ஓட்டத்திலும் தலா ஒரு தங்கம் கைப்பற்றினார்.

தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இவருக்கு கடந்த ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

சர்வதேச தடகள போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், தொடர்ச்சியாக 5வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டதில் பாகிஸ்தான் அணி வெற்றி !

செக்குடியரசில் உள்ள நோவ் மெஸ்டோ நகரில், சர்வதேச கிராண்ட்பிரிக்ஸ் தடகள போட்டிகள் நடந்தன.

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் ஹிமா தாஸ், பந்தய துாரத்தை 52.09 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

19 நாளில் 5 தங்கம்: இது, கடந்த 19 நாட்களில் ஹிமா தாஸ் வென்ற 5வது தங்கப் பதக்கம்.

இவர், சமீபத்தில் போலந்து (ஜூலை 2, 8), செக்குடியரசில் (ஜூலை 13, 19) நடந்த 4 வெவ்வேறு சர்வதேச தடகள போட்டிகளின் 200 மீ., ஓட்டத்தில் தலா ஒரு தங்கம் வென்றிருந்தார்.

ஒலிம்பிக் வாய்ப்பு: வரும் 2020ல் ஜப்பானில் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று நடக்கின்றன.

இதில் 200 மீ., ஓட்டத்திற்கு 23.02 வினாடியும், 400 மீ., ஓட்டத்திற்கு 51.80 வினாடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், விரைவில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

ஹிமா தாஸ், 200 மீ., ஓட்டத்தில் 23.10 வினாடி (2018) மற்றும் 400 மீ., ஓட்டத்தில் 50.79 வினாடியில் (2018) இலக்கை அடைந்து தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.