Hero Movie
சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. அதில் ஒன்று தான் இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கும் ஹீரோ.

கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ரசிகர்களின் கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் பாலிவுட்டில் வெளியான க்ரிஷ் பட போஸ்டர் போலவே இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.