தனுஷ் படமும், சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் ரிலீஸ்?

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் தகவல்கள் காண்போம்..
சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் கடந்த மாதம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை தமிழ்நாட்டில் பெற்றது. அதேசமயம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.
‘குபேரா’ படத்துக்கு முன்னதாக, தானே இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
‘குபேரா’ படத்தை முடித்த தனுஷ் பாலிவுட்டில் அடுத்ததாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதில் அவருக்கு ஜோடியக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது.
இந்நிலையில் வெளியாகவுள்ள ‘இட்லி கடை’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்னும் சில மாதங்களில் பிரமாண்டமாக நடத்தவும், படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யவும் திட்டம் என கூறப்படுகிறது. அதேநாளில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படமும் ரிலீஸாக வாய்ப்புகள் அதிகம் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
