நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று சிறப்பாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் தான் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் வில் அம்பு, பியார் பிரேமா காதல் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இன்று சிறப்பாக நடைபெற்ற ஹரிஷ் கல்யாணின்  திருமணம்!!… வெளியான புகைப்படம் வைரல்!.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தனது திருமணம் குறித்த தகவலை வெளியிட்டார். அன்று காலையில் தனது வாழ்க்கை துணையான நர்மதா உதயகுமாருடன் கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘புதிய மங்களகரமான தொடக்கம்’ என்று ஹரிஷ் கல்யாண் பதிவிட்டிருந்தார். இந்த மகிழ்ச்சியான தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஹரிஷ் கல்யாண் எனது திருமணத்தை பலரும் காதல் திருமணம் என நினைக்கின்றனர் . இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், என்று அவர் கூறியிருந்தார்.

இன்று சிறப்பாக நடைபெற்ற ஹரிஷ் கல்யாணின்  திருமணம்!!… வெளியான புகைப்படம் வைரல்!.

மேலும் இந்த திருமண விழாவிற்கு ரசிகர்கள் அனைவருக்கும் அழைப்பு வைத்து அனைவரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக ஹரிஷ் கல்யாண் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று சிறப்பாக நடைபெற்ற ஹரிஷ் கல்யாணின்  திருமணம்!!… வெளியான புகைப்படம் வைரல்!.