விஜய்க்கு ஏற்ப ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் உருவாக்கம்: ஹெச்.வினோத் வொர்க்..

Web Ads

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த்’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ரைட்ஸை ‘ஜனநாயகன்’ படக்குழு பெற்றுள்ளது தெரிந்ததே. அவ்வகையில் அப்படியே ‘பகவந்த் கேசரி’ படத்தை ஹெச்.வினோத் ரீமேக் செய்திருக்க மாட்டார் என்கின்றனர்.

‘பகவந்த் கேசரி’ படத்தின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு அதில் விஜய்க்காக மாற்றங்களை செய்து, தன் ஸ்டைலில் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் உருவாக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு. அதனை நன்கு உணர்ந்து, தமிழுக்கு ஏற்ப கதையை திருத்தி உருவாக்கியுள்ளார்.

மேலும், விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு ஏற்ப சில காட்சிகளை ஹெச்.வினோத் இப்படத்தில் சேர்த்திருக்கிறார். குறிப்பாக படத்தின் சண்டைக் காட்சிகளை இந்த ட்ரெண்டிற்கு ஏற்பவும், அதே சமயத்தில் நம்பும்படியாகவும்
எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் போலீசாக நடிக்கின்றார் என்பது கிலிம்ப்ஸ் வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, போலீசாக அவர் ஒரு சிலரை கைது பண்ணுவது போல படத்தில் காட்சிகள் உள்ளதாகவும், அந்த காட்சிகளை விஜய்க்கு ஏற்றாற்போல தனி ஸ்டைலிலும் படமாக்கியிருக்கிறார். இதற்கும் பகவந்த் கேசரி படத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.

முன்னதாக, அஜித் நடிப்பில் ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சிறப்பாக உருவாக்கினார் ஹெச்.வினோத். அவ்வகையில், ‘ஜனநாயகன்’ படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

h vinoth changes jananayagan script and scenes for vijay stardom
h vinoth changes jananayagan script and scenes for vijay stardom