
குட் நைட் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் குட் நைட். விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் குறட்டையை மையமாக வைத்து வெளியான மிக திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிரிக்க வைத்தது.
திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்ற இந்த படம் அடுத்ததாக OTT -ல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வரும் ஜூலை மூன்றாம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் குட்நைட் திரைப்படம் வெளியாகும் என டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதோ அந்த அறிவிப்பு