96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌரி ஜி கிஷன் அவர்களின் லேட்டஸ்ட் மாடர்ன் டிரஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

தென்னிந்திய நடிகைகளில் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கௌரி ஜி கிஷன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் பள்ளி பருவத்தில் வரும் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

இப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த இவர் அதையடுத்து உதயநிதி மனைவி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காகித ராக்கெட் படத்தில் சாருவாக நடித்திருந்ததன் மூலம் வெப் சீரிஸிலும் அறிமுகமாகியுள்ளார். சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் பல விருதுகளை தட்டி சென்ற கௌரி ஜி கிஷன் தற்போது கதாநாயகிக்காக வாய்ப்பை தேடி தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அல்ட்ரா மாடர்ன் ஆக மாறி இருக்கும் இவரது புதிய வீடியோ இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவை பார்த்துள்ள ரசிகர்கள் 96 ஜானு வா இது என்ற ஆச்சரியத்தோடு ரசித்து வருகின்றனர்.