நேற்றைய தினம் சாய் பல்லவியின் “கார்கி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிங்கிள் பாடல் இணையத்தில் வெளியான நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையான சாய்பல்லவியின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் தான் “கார்கி”. இப்படத்தை இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் எழுதிய இயக்கியுள்ளார். ஃபிலிம் பேக்டரி மற்றும் பிளாக் ஜெனி ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் வழங்கியுள்ளனர்.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த “கார்கி” திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் கோவில் வசந்தா இசையில் உருவான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “யாத்திரி” பாடல் இணையத்தில் நேற்றைய தினம் வெளியானதை தொடர்ந்து தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

YouTube video