Producer Council

Producer Council :  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நன்கொடையாக வழங்குகிறார்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நன்கொடை வழங்க தீர்மானிக்கப்பட்டது .

அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக நன்கொடை அளிக்க முடிவெடுத்துள்ளனர்.

மேலும், திரைப்படக் கூட்டமைப்பிலிருந்து பலரும் தங்களால் இயன்ற அளவில் நன்கொடை அளித்து வருகிறார்கள் .

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திரை உலகிர்காகவும் , சமூக நலத்திற்காகவும் எப்போதும் குரல் கொடுத்து வருகிறது .

அந்த வகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சிறந்த முறையில் தேவையான உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது . தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.