துணிவு படத்தைப் பார்த்து கேரள விநியோகஸ்தர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

First Review About Thunivu Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வியாபாரம் படு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தை பார்த்த கேரள விநியோகிஸ்தர்கள் முதல் விமர்சனங்களை வெளியிட்டுள்ள.

அதாவது படத்தைப் பார்த்து முதல் 20 நிமிடத்திலேயே மிரண்டு போய் உள்ளனர். இதனால் துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என அதீத நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துணிவு திரைப்படம் பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.