சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

First Look Release Update of Suriya 42 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?? பட்டய கிளப்பும் அதிரடி அப்டேட்

இதனைத் தொடர்ந்து சூர்யா உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற சிறு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படங்களை தொடர்ந்து சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 42 படத்தில் நடிக்க உள்ளார். வரலாற்றுக் கதையில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?? பட்டய கிளப்பும் அதிரடி அப்டேட்

இப்படியான நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த வருட பொங்கல் சூர்யா ரசிகர்களுக்கும் சூப்பர் கொண்டாட்டம் தான்.