ரூபாய் 150 கோடி பட்ஜெட்டில் உருவான தி லெஜன்ட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமடைந்ததை தொடர்ந்து வெள்ளி திரையில் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படத்தை ஜேடி ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர்.

அது மட்டுமல்லாமல் இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ரூபாய் 150 கோடி பக்கெட் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவான நிலையில் நேற்று முன்தினம் படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூல் உலக முழுவதும் சேர்த்து ரூபாய் இரண்டு கோடி ரூபாய் வசூலையும் செய்துள்ளது. இன்று நாளையும் விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.