கால் பந்தாட்டத்தின் மைதானத்தில் அஜித் பாடலுக்கு ஆட்டம் போட்ட ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் துணிவு திரைப்படம் வெளியாகிறது.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட எக்கச்சக்கமான நடிகர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியிட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், டப்பிங் பணிகள் மற்றும் ஸ்ட்ராங் சூட்டிங் உள்ளிட்டவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் பற்றின தகவல் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் அஜித் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரசிகர்கள் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது நேற்றைய தினம் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் போர்ச்சுகல், உருகுவே அணிகள் மோதினர், அந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியை மைதானத்திற்கு வெளியே கொண்டாடிய ரசிகர்கள் அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஆலுமா டோலுமா’ என்ற பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.