தங்களான் திரைப்படத்தில் நடித்தது குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக விளங்கிவரும் பா.ரஞ்சித் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் வெளியிட்டு இருக்கும் நெகிழ்ச்சியான பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், “தங்கலானில் எனது அபாரமான பயணத்திற்கு நன்றி தெரிவிப்பது கடினம், போராட்டங்கள், சிரிப்பு, கண்ணீர். உருவான நட்பில் இருந்து வியக்க வைக்கும் கலைத்திறன் வரை, அது மனதைக் கவரும். அழகான இந்தியாவில் என்னை அப்படி உணரவைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி”. எனக் குறிப்பிட்டு படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களுடன் பகிர்ந்து இருக்கிறார் . இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.