சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பம் முதல் தற்போது வரை விறுவிறுப்பாக பல ட்விஸ்ட்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு வாரமும் சீரியலின் ரேட்டிங் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இப்படியான நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் ஒளிபரப்பில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

ஆமாம், வரும் வாரம் முதல் அதாவது ஜூலை 29 முதல் சிறகடிக்க ஆசை சீரியல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வருவதால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதனால் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.