பரபரப்பான கதை களத்துடன் நகர்ந்து வரும் சுந்தரி சீரியல் முடிவை நோக்கி நெருங்கி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக கேப்ரில்லா நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இவ்வளவு நாளாக கார்த்திக் அனுவுக்கு தெரியாமல் ரகசியங்களை பொத்தி பொத்தி வைத்து வந்த நிலையில் தற்போது மொத்தமும் வெளியாகி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படியான நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது ஆனால் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பதை தெரிய வந்துள்ளது. ஆமாம் சுந்தரி சீரியல் அடுத்த கட்ட அத்தியாயத்தை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் போல சுந்தரி முடிவடைந்ததும் அதன் அடுத்த சீசன் தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் சுந்தரி சீரியல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.