சிம்பு ரசிகர்களுக்கு இந்த வார கொண்டாட்டமாக பத்து தலை திரைப்படத்தின் டிவி பிரிமியர் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பத்து தலை.

கன்னட திரை உலகில் வெளியாகி வெற்றி பெற்ற மப்டி படத்தின் ரீமேக் ஆக வெளியான இந்த படத்தை ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்க சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் முதல்முறையாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. ஆமாம் வரும் ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 10 தலை படத்தின் தொலைக்காட்சி பிரிமியர் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வாரம் செம கொண்டாட்டம் தான் என சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.