மகள் இயக்கத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயில்ல திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடங்கி லால் சலாம் என்ற படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கிறார்.

அதன் பிறகு ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கம் படம் என இரண்டையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிகாந்த் ரூபாய் 105 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் லால் சலாம் படத்திற்கு 25 கோடி ரூபாய் ஞானவேல் இயக்கும் படத்திற்கு 85 கோடி ரூபாய் சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது.

இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.