லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா அல்லது துபாயில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ படத்தின் வெளிநாட்டு வியாபாரம் வேற லெவலில் நடந்துள்ளது.

இதனால் அங்குள்ள விநியோகஸ்தர்கள் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இங்கு நடந்தால் அது படத்திற்கு நல்ல ப்ரோமோஷனாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் படக்குழுவும் லியோ இசை வெளியீட்டு விழாவை வெளி நாட்டில் நடத்தலாமா என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இசை வெளியீட்டு விழா நடந்தால் விஜய் பேச்சை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என கூறி வருகின்றனர்.