
உலக நாயகன் கமல்ஹாசனே போன் போட்டு கூப்பிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நோ சொல்லியுள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்த நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிகர் அப்பாஸிற்கு ஃபோன் போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அவர் எனக்கு அதெல்லாம் செட் ஆகாது என்று நோ சொல்லி உள்ளார். இவ்வளவு நாளாக வெளிநாட்டில் இருந்து வந்த அப்பாஸ் தற்போது சென்னைக்கு திரும்பி வந்து பல மீடியாக்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியில் தான் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.
