
ஜீவானந்தம் கேரக்டர் தொடர்ந்து இடம் பெறுமா என்பது குறித்த கேள்விக்கு திருச்செல்வம் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் திருச்செல்வம்.

ரசிகர்கள் மத்தியில் இந்த கேரக்டர் முக்கியத்துவம் உள்ளதாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த கேரக்டர் தொடர்ந்து இடம் பெறுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
முதலில் கொஞ்ச நாளைக்கு இடம் பெறும் கதாபாத்திரமாகத்தான் இந்த ஜீவானந்தம் கேரக்டர் எழுதப்பட்டது. கதையின் முக்கியத்துவம் கருதி கொஞ்சம் அதிகமான எபிசோடுகளில் இடம்பெற்று வருகிறது.
தொடர்ந்து இந்த கதாபாத்திரம் மக்களின் வரவேற்பை பொறுத்து சீரியலில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான எபிசோடுகளில் இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.
