ethirneechal today episode promo
ethirneechal today episode promo

குணசேகரன், கரிகாலனுக்கு பல்பு கொடுத்து எஸ்கேப் ஆகி உள்ளார் ஜனனி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் ஆதிரையை கூட்டிக்கொண்டு குல தெய்வ கோவிலுக்கு வர அவர்களுடன் கதிர், கரிகாலனும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் எல்லாரும் கோவிலுக்கு வந்திருக்க ஐயர் யார் பேருக்கு அர்ச்சனை என கேட்க நந்தினி ஆதிரை, மாப்பிள்ளை பேரு அருண் என்று சொல்ல கரிகாலன் என்னது அருணா? என்னை ஏமாத்த பாக்கறீங்களா என சத்தம் போடுகிறார்.

உடனே ரேணுகா அவனை கூப்பிட்டோம் ஆதிரை, கரிகாலன் கல்யாண் நல்லபடியாக நடக்கணும்னு அவனை கண்ணை மூடி சொல்ல சொல்கிறார். அவனும் கண்ணை மூடி சொல்ல ஆரம்பிக்க இவர்கள் கூண்டோடு எஸ்கேப் ஆகின்றனர்.

இதனால் இன்றைய எபிசோட் செம விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.