அப்பத்தா பற்றி குணசேகரன் சொன்ன வார்த்தையால் விசாலாட்சி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அப்பத்தா எங்க போச்சுன்னு தெரியல உங்க அண்ணி யாருக்காவது போன் போட்டு கேளுமா என விசாலாட்சி சொல்ல குணசேகரன் எங்க போக போகுது? அது என்ன சின்ன குழந்தையா என பதில் அளிக்கிறார்.

பிறகு ஜனனி மற்றும் சக்தி ஹாஸ்பிடல் இருக்க டாக்டர் இப்ப நான் சொல்ல போறது நீங்க பொறுமையா கேட்கணும் என சொல்ல ஜனனி என்ன அது என்ன பதற்றம் அடைகிறார். இதனால் அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு குணசேகரன் செய்த சூழ்ச்சி என்ன என்பது குறித்த விஷயங்கள் இன்றைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.