வீரபாகுவோட அக்கா இவர்கள் தானே ரசிகர்கள் சீரியலின் குழுவின் ரீல்ஸ் வீடியோ மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் நடித்து வரும் அனைவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் தற்போது ரேணுகா நந்தினி மற்றும் சக்தி என மூவரும் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோவில் வீரபாகு காமெடி தான் இடம் பெற்றுள்ளது.
அர்ஜுன் நடிப்பில் வெளியாகும் இந்த படத்தில் வீரபாண்டி தன்னுடைய அக்காவை விட்டுக் கொடுத்தது பற்றி பேசும் காமெடியை ரீல்ஸ் செய்ய இதில் வீரபாகுவின் அக்காவாக நந்தினி ( ஹரி பிரியா ) நடித்துள்ளார்.
இதனை பார்த்து ரசிகர்கள் மூணு பேரோட எக்ஸ்பிரஸ் செம, ஒரு வழியா அந்த வீரபாகுவோட அக்காவை கண்டுபிடிச்சாச்சு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.