எதிர்நீச்சல் சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்களும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து சீரியல் இன் வெற்றிக்கு காரணம் ஆக இருந்து வருகின்றனர்.
குணசேகரன் ஆதரிக்கு வலுக்கட்டாயமாக கரிகாலனுடன் கல்யாணம் செய்து வைத்துள்ள நிலையில் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் வேறு யாருமில்லை எஸ் கே ஆரின் கடைசி தம்பியாக ஆதிரைக்கு ஜோடியாக நடித்து வந்த அருண் தானாம். மது கார்த்திக் என்பவர் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் சீரியல் தன்னுடைய கதாபாத்திரத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்ற காரணத்தினால் அவர் வெளியேற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் வரும் நாட்களில் அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.