
ஜீவானந்தம் மகள் சொன்ன வார்த்தையை கேட்டு கலங்கியுள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் நேற்று குணசேகரன் வீட்டு பெண்கள் எல்லோரும் ஜீவானந்தத்தை தேடி வந்த நிலையில் நந்தினி வெண்பாவை கட்டியணைத்துக் கொண்டு கண் கலங்கினார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் குணசேகரன் என்ன இங்க சத்தம் என்று கேட்க ஆதிரை நான் தான் பிரச்சனை பண்ணிட்டு இருக்கேன் என பதிலடி கொடுக்கிறார்.

உடனே இந்த வீட்டு பொம்பளைங்கள பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னை மீறி ஒரு அடி எடுத்து வச்சா உனக்கு பொண்ணு இல்லாமல் பண்ணி விடுவேன் என தன்னுடைய அம்மாவை மிரட்டுகிறார்.

மறுபக்கம் ஜீவானந்தத்தின் மகள் வெண்பா ஈஸ்வரியை பார்த்து நீங்க என்னுடைய அம்மா மாதிரியே இருக்கீங்க என்று சொல்ல அவர் அழக்கூடாது என்று வெண்பாவை கட்டி அணைத்துக் கொண்டு கண் கலங்குகிறார்.
