குணசேகரன் உயிருக்கு போராட பெண்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இதனால் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆடிட்டர் 40% ஷேரில் இந்த வீடும் இருக்கு என பெரிய அதிர்ச்சி கொடுக்க குணசேகரன் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து விழ கதிர், கரிகாலன் ஆகியோர் அவரை ஹாஸ்பிடலில் கொண்டு வந்து சேர்த்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் நந்தினி நாம் போய் உருண்டு பிரண்டு ஜீவானந்தம் கிட்ட இருந்து சொத்தை வாங்கிட்டு வந்தா தான் கண் விழிப்பார் போல என்று சொல்கிறார்.
ஜனனியும் எனக்கும் அது தான் சரின்னு படுதுனு சொல்ல ஈஸ்வரி வா ஜனனி போகலாம் என்று சொல்கிறார். இதையடுத்து கரிகாலன் கதிரிடம் மாமா ஐஸ் பெட்டிக்கு சொல்லிடவா என்று கேட்க கதிர் எட்டி உதைத்துடுவேன் என கோபம் அடைய நீ போடுற சத்தத்துல பாதி பேஷண்ட் செத்து போயிடுவாங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக டாக்டர் எதையோ சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.