பழைய ஃபார்முக்கு வந்துள்ளார் அப்பத்தா.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அப்பத்தா காணாமல் போக குணசேகரன் எல்லாரையும் பிடித்து கேள்வி கேட்க பெண்கள் எல்லாரும் கூட்டு சேர்ந்து குணசேகரன் ரவுண்டு கட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அப்பத்தா ஜனனியுடன் வந்து நீதிபதி சந்தித்து இவர் தான் ஜீவானந்தம் என்று பேச நிறைய சந்தர்ப்பங்களில் உங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என்று நீதிபதி சொல்ல அப்பத்தா இவர் ரொம்ப நல்லவர் என்று கூறுகிறார்.

அடுத்ததாக அங்கே வரும் குணசேகரன் அப்பதாவை பார்த்து என்ன பழிவாங்குறியா நீ? நான் அழிந்தாலும் அழிவேன் அதுக்கு முன்னாடி உங்க எல்லாரையும் அழிச்சிட்டு தான் அழிவேன் என்று கூறுகிறார்.

குணசேகரனின் இந்த ஆணவப் பேச்சைக் கேட்டு அப்பத்தா நிறுத்து குணசேகரா என அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் அப்பத்தா பழைய ஃபார்ம்க்கு வந்து விட்டதாகவும் இனி கதை விறுவிறுப்பாக நகரும் இடமும் எதிர்பார்க்கப்படுகிறது.