அப்பத்தா காணாமல் போக குணசேகரனை சுற்றி வளைத்துள்ளனர் சிங்கப்பெண்கள்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஜனனி எனக்கு என்னமோ ஜீவானந்தம் மனைவியை இவங்க தான் சுட்டுக்கொன்னு இருப்பாங்கன்னு சந்தேகமா இருக்கு என்று சொல்ல நந்தினி எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு என்று கூறுகிறார்.

அடுத்ததாக அப்பத்தா காணாமல் போக குணசேகரன் வீட்டில் இத்தனை பேர் இருக்கும் அந்த கிழவி காணாம போயிட்டானா என்ன அர்த்தம் என்று சத்தம் போட ரேணுகா உங்க தம்பியை கூடத்தான் காணோம், அங்க சம்பவம் பண்ண அனுப்பிட்டு இங்க நாடகம் போட்டுக்கிட்டு திரியறீங்களா என்று நறுக்கென கேள்வி கேட்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஜனனி குணசேகரனை பார்த்து என்ன பண்ணீங்க அப்பத்தாவை என்று ஆவேசப்படுகிறார்.