
கரிகாலனுடன் ஜனனிக்கு கல்யாணம் நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதிரையுடன் ஜனனி உள்ளிட்டோர் இருக்கும் கோவிலை குணசேகரன் டீம் சுற்றி வளைத்தது.

இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஒருபக்கம் விசாலாட்சி நம்மையே இந்த பாடு படுத்தறான் அங்க போய் என்ன பண்ண போறானோ என புலம்ப ஈஸ்வரி ஜனனி பார்த்துப்பா என நம்பிக்கையோடு சொல்கிறார்.

மறுபக்கம் குணசேகரன் என் ஒரே தங்கச்சிக்கு இங்க வச்சு கல்யாணம் பண்ண போறேன் என சொல்லி கரிகாலனை தாலி கட்ட சொல்ல ஆதிரையின் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கல்யாணம் நடந்து முடிகிறது.

ஜனனி, நந்தினி , ரேணுகா என மூவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று அழுது துடிக்கின்றனர். இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
