ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கௌதம்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஜீவானந்தம் குணசேகரன் கதிர் ஜனனி ஆகியோர் எதிரெதிராக உட்கார்ந்து இருக்க கௌதம் டிப்டாப்பாக கோட்டு சூட்டில் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். இதை பார்த்த ஜனனி அதிர்ச்சியாகி கௌதம் நீ எங்கே எங்கே என்று கேள்வி கேட்க அவன் 40% ஷேர் இப்போ எங்க பேர்ல தான் இருக்கு என்று சொல்கிறார்.

குணசேகரன் வீடு ஒன்னு இருக்கு என்று கேட்க அதுவும் எங்க பேர்ல தான் இருக்கு என அதிர்ச்சி கொடுக்க உங்களால ஒரு ஆணியும் புடுங்க முடியாது என ஆவேசப்படுகிறார். இதனால் ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டு கட்டாக தூக்கி செல்கின்றனர்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இன்றைய எபிசோட் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.